காரில் சென்ற சுற்றுலா பயணிகள்..ஓட ஓட விரட்டிய படையப்பா யானை - பதறவைக்கும் காட்சி!
கார்களில் வந்தவர்களை படையப்பா யானை விரட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
படையப்பா யானை
கேரள மாநிலம் மூணார் பகுதியில் இருந்து கல்லாறுக்கு உள்ளூர் வாசிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் படையப்பா யானையானது சாலையில் நடமாடி கொண்டு இருந்தது. எப்போதும் போல் வாகனங்களை பார்த்தால் யானை சென்று விடும் என்ற நம்பிக்கையுடன் பயணத்தை தொடர்ந்துள்ளனர்.
குறுகிய பாதை என்பதால் இரு கார்களும் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த யானையானது தொடர்ந்து நடைபோட்டு எதிரில் வந்து கொண்டிருந்த காரணத்தினால் பயணிகள் வாகனத்தை பின்னோக்கி எடுத்து சென்றனர். ஒரு கட்டத்தில் வாகனத்தில் வந்த நபர்கள் யானையை பார்த்து பயந்து கார்களை விட்டு வெளியேறி ஓடினர்.
சுற்றுலா பயணிகள்
அந்த காட்சிகளை கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது ஒரு காரில் இருந்த ஓட்டுநர் சதீஷ் சாதூரியமாக காரை பின்னோக்கி எடுத்து யானை தொடர்ந்து செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்ததால் படையப்பா யானை மீண்டும் வனப்பகுதிக்கு சென்றது.
கார்களில் இருந்தவர்கள் அனைவரும் மீண்டும் கார்களில் ஏறி சென்றனர். படையப்பா யானையானது வனத்துறை கண்காணிப்பில் இருந்து வருகிறது. ஆனால் அது சிறிது காலம் வனப்பகுதிக்குள் சென்று விட்டதால் வனத்துறையினர் கண்காணிக்காமல் இருந்தனர். தற்போது மீண்டும் படையப்பா யானை நடமாடிவருவதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்