காரை தாக்கிய காட்டு யானை - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்

pollachi elephantattack aliyar wildelephantattacksfamily
By Swetha Subash Mar 16, 2022 01:36 PM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

பொள்ளாச்சி அருகே நவ மலையில் காரில் சென்ற மின்சார ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினரை ஒற்றை காட்டு யானை தாக்கியது.

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட நவ மலையில் மின்சார வாரிய குடும்பத்தினர் மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் ஆழியார் அணையை நோக்கி வனத்தை விட்டு காட்டு யானைகள் நீர் பருக வருகின்றன.

கடந்த ஒரு மாதமாக கேரளாவிலிருந்து வந்த ஒற்றை காட்டு யானை மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளான சின்னார்பதி,

வால்பாறை சாலை, நவமலை சாலையில் இரவு நேரம் மட்டும் இல்லாமல் பகலிலும் நடமாடி வருகிறது.

இந்த நிலையில் மின்சார ஊழியர் சரவணன் தனது உறவினர்களுடன் பொள்ளாச்சியில் இருந்து நவமலையில் உள்ள சரவணன் குடியிருப்பிற்கு இரு கார்களில் சென்றுள்ளனர்.

அப்போது அங்கே சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை காரை வழிமறித்து நின்றது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சரவணன் காரை பின்னோக்கி இயக்கினார்.

அப்போது ஒற்றை காட்டு யானை காரை முட்டி துாக்கி பள்ளத்தில் தள்ளியது. பள்ளத்தில் விழுந்த காரை யானை உருட்டி கொடூரமாக தாக்கியது. அதே போல மற்றொரு காரையும் காட்டுக்குள் வைத்து தாக்கியது.

அப்போது ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் யானையை விரட்டியடித்து சரவணன் மற்றும் உறவினர்களை ஆழியாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் சிறு காயம் அடைந்த சரவணன் மற்றும் அவரது உறவினர்களை சிகிச்சைக்கு பின் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நவமலையில் உள்ள பொது மக்கள் இரவுநேரங்களில் வெளியே வரவேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்குமாறும் வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.