பிளவுவாத அரசியல் சித்தாந்தம்.. விஜய்யின் அரசியல் பேச்சு - பா.ரஞ்சித் கொடுத்த ரியாக்‌ஷன்!

Vijay Pa. Ranjith Thamizhaga Vetri Kazhagam
By Vidhya Senthil Oct 28, 2024 11:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in அரசியல்
Report

     சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்கும் ஊழலுக்கும் எதிராகச் செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்பதாக பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று (27.10.2024) நடைபெற்றது. 100 அடி கொடிக் கம்பத்தில் அக்கட்சியின் கொடியை விஜய் ஏற்றினார். அதன்பிறகு இந்த மாநாட்டில் தவெக கட்சி தலைவர் விஜய் கட்சி கொள்கை குறித்தும், கட்சியின் செயல்பாடு குறித்தும் பேசியிருந்தார்.

pa . ranjith

அப்போது மதச்சார்பற்ற சமூக நீதி, ஆட்சி அதிகாரம், இருமொழிக் கொள்கை, தன்னாட்சி உரிமை, மதச்சார்பின்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தீண்டாமை ஒழிப்பு, உற்பத்தித் திறன், போதையில்லா தமிழகம் உள்ளிட்ட பல கொள்கைகளை முன்னிறுத்தி விஜய் பேசியிருந்தார்.

மேலும் அவர், பிரித்தாலும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம், ஊழல் மலிந்த அரசியல் ஆகியவை தான், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் எதிரி என்று கூறியிருந்தார் .

தொண்டர்களால் நிரம்பிய தவெக மாநாடு - நண்பர் விஜய்க்கு.. உதயநிதி ஸ்டாலின் நச்!

தொண்டர்களால் நிரம்பிய தவெக மாநாடு - நண்பர் விஜய்க்கு.. உதயநிதி ஸ்டாலின் நச்!

அதுமட்டுமில்லாமல் நம்முடைய இயல்பான அடிப்படையான கோட்பாட்டிற்கு எதிராக இருக்கிற மாதிரி மக்களை மதம், சாதி, இனம், மொழி பாலினம், ஏழை, பணக்காரன் என்று சூழ்ச்சி செய்து பிரித்தாலும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம் நம்முடைய அரசியல் எதிரி.

பா. ரஞ்சித்

நம்முடைய ஒரு எதிரி இனவாத சக்திகள் என்றால், நம்முடைய இன்னொரு எதிரி ஊழல் கபடத்தாரர்கள் என விஜய் பேசியிருந்தார். இது குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் " என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் கன்னிப் பேச்சை முடித்திருக்கும்

#தமிழகவெற்றிக்கழகம் தலைவர் திரு. விஜய் அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு " மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்கும் ஊழலுக்கும் எதிராகச் செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். மகிழ்ச்சி!" என பா. ரஞ்சித் விஜய் பேசி முடித்ததும் தனது வாழ்த்தை முதல் நபராக தெரிவித்துள்ளார்.