பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைவராகிறேனா? பா.ரஞ்சித் நேரடி பதில்
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதற்கு தொடர்ந்து தனது கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.
ஆம்ஸ்ட்ராங் கொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதில் தொடர்ந்து பல திடுக்கிடும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. பல பிரதான கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கைதாகி வருகிறார்கள்.
பல தரப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விசாரணையில் இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. துவக்கத்தில் இருந்தே திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் இந்த சம்பவத்தில் தனது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக அளவில் பேசம் பொருளாக கவனம் ஈர்த்துள்ள நிலையில், அடுத்த மாநில தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அந்த கருத்துக்கள் இயக்குனர் பா.ரஞ்சித் பக்கம் திரும்பியுள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பா.ரஞ்சித்திடம் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.
தலைவரா..?
அப்போது பேசிய அவர், தான் ஏற்கனவே நேரடி அரசியலை தான் செய்து வருவதாக குறிப்பிட்டு, இருப்பினும் தனக்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராகும் விருப்பம் இல்லை என கூறினார்.
தொடர்ந்து பேசியவர், திமுக - அதிமுக எந்த ஆட்சி வந்தாலும் தலித் மக்களின் பிரச்சனை தீர்ந்தபாடில்லை என கூறி, தமிழ்நாட்டில் ஆம்ஸ்ட்ராங்கின் நிலை தொடர்ந்து நீடித்தால் திமுகவிற்கு அடுத்த ஆட்சியில் ஆதரவு கொடுக்க மாட்டேன் என தெரிவித்திருக்கிறார்.