அடுத்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிக்க மாட்டேன் - பா ரஞ்சித்
தமிழ்நாட்டில் ஆம்ஸ்ட்ராங்கின் நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளிக்க மாட்டேன் என பா.ரஞ்சித் பேசியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்
கடந்த 5 ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52), சென்னை பெரம்பூர் உள்ள தனது வீட்டின் முன்பு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தற்போது வரை 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இதில் பாஜக, தமாகா மற்றும் அதிமுக கட்சியினர் மீதும் தொடர்புள்ளதாக காவல்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரான இயக்குனர் பா.ரஞ்சித் வரும் 20 ம் தேதி ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
பா.ரஞ்சித்
இந்நிலையில் நேற்று பாடகர் அறிவின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பா.ரஞ்சித், திமுகவிற்கு வாக்களித்தால் ஏதேனும் மாற்றம் வரும் என்று வாக்களித்தேன். ஆனால் திமுக, அதிமுக எந்த ஆட்சி வந்தாலும் தலித் மக்களின் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. தமிழ்நாட்டில் ஆம்ஸ்ட்ராங்கின் நிலை தொடர்ந்து நீடித்தால் திமுகவிற்கு அடுத்த ஆட்சியில் ஆதரவு கொடுக்க மாட்டேன்.
அதிகாரிகளுக்கு சரியான அதிகாரம் கொடுத்து இந்தமாதிரி பிரச்னைகளை சட்டரீதியாக, நிர்வாக ரீதியாக தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதுப்புது நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வருவது அதிர்ச்சியளிக்கிறது. என பேசியுள்ளார்.