பா ரஞ்சித்துடன் மோதும் அஜய் ஞானமுத்து- என்ன இப்படி ஆயிடுச்சு!
பா ரஞ்சித் படமும், அஜய் ஞானமுத்து படமும் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரே நாளில் வெளியாக உள்ளது.
டிமான்ட்டி காலனி
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் அனைத்து படங்களிலும் உண்மை சம்பவத்தை தழுவியும் , அரசியல் கலந்த திரைக்கதையை பார்க்க முடியும். அதேபோல் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குனர் ஏஆர் முருகதாஸுக்கு உதவியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி என்ற ஹாரர்-த்ரில்லர் திரைப்படத்தின் மூலம் அஜய் ஞானமுத்து இயக்குநராக அறிமுகமானார்.
ரீ-ரிலீஸ்
இத்திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் ,வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.இதனை தொடர்ந்து 31 ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கிய கோப்ரா படமும் வெளியானது . இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அந்த வகையில் தற்பொழுது இரண்டு வருடங்களுக்கு பிறகு பா ரஞ்சித் படமும், அஜய் ஞானமுத்து படமும் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரே நாளில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.