OYO ஓனருக்கு திருமணம் - பிரதமர் மோடியை சந்தித்து காலில் விழுந்து ஆசி!
இளம் தொழிலதிபரான ரிதேஷ் அகர்வால் தனது திருமண அழைப்பிதழை பிரதமர் மோடிக்கு நேரில் சந்தித்து கொடுத்துள்ளார்.
ரிதேஷ் அகர்வால்
தங்கும் விடுதிகளை வாடகைக்கு விடும் பிரபல நிறுவனமான ஓயோ- வின் நிறுவனர் ரிதேஷ் அகர்வால்(29). இவரே அந்நிறுவன தலைமை செய்ல் அதிகாரியாகவும் உள்ளார். இவருக்கு திருமணம் நிச்சயமான நிலையில்,

தனது திருமண அழைப்பிதழை டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு தனது தாய் மற்றும் வருங்கால மனைவியுடன் சென்று கொடுத்து காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். மேலும், பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கு நேரம் கொடுத்து வாழ்த்திய பிரதமருக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.
மோடியுடன் சந்திப்பு
இவரது திருமணம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. அதன்பின் டெல்லி 5 ஸ்டார் ஹோட்டலில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2013இல் தனது 19ஆவது வயதில் ஓயோ ரூம்ஸ் நிறுவனத்தை தொடங்கிய ரிதேஷ் தனது அபார வணிக யுக்தியால் குறுகிய காலத்தில் வெகு விரைவான வளர்ச்சியை கண்டார்.

தற்போது 80 நாடுகளில் உள்ள 800 நகரங்களில் இந்த ஓயோ நிறுவனம் செயல்படுகிறது. இவர் தனது தொழில் திறமைக்காக பல சர்வதேச விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.