6000 கோடி சொத்து - தொழிலாளிக்கு அள்ளி கொடுத்த தொழிலதிபர் பற்றி தெரியுமா..?
தொழிலதிபர்கள் பெரும்பாலும் தொழிலாளர்களுக்கு எதிரான மனநிலையில் தான் இருப்பார்கள் என்ற கருத்து உள்ளது.
6000 கோடி சொத்து
ஆனால், அதற்கு எதிர்மறையான தொழிலதிபர்களும் நாம் நாட்டில் உள்ளனர். அப்படி ஒருவரை பற்றி தான் நாம் பார்க்கப்போகிறோம். நிதி நிறுவனம் எப்போதும் சிக்கலான ஒரு தொழிலே.
ஒரு சிலரே அதில் பெரும் வெற்றியை பதிவு செய்வர்கள். அப்படிபட்டவர்களில் ஒருவர் தான் ஆர்.தியாகராஜன். ஸ்ரீராம் நிதி நிறுவனத்தின் நிறுவனர் தான் ஆர்.தியாகராஜன்.
தமிழநாட்டை சேர்ந்த இவர், தன்னுடைய 37 வயதில் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார்.
சாதாரண வீட்டில்
அடுத்த 20 ஆண்டுகளில் இவர் தனது நிறுவனத்தை இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களுள் ஒன்றாக உயர்த்தினார். இந்தக் குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட், ஒரே ஆண்டில் பங்கு சந்தையில் 35 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது.
ஸ்ரீராம் குழும பங்குகளின் நிகர சொத்து மதிப்பு ரூ.6,210 கோடியாகும். 86 வயதாகும் ஆர்.தியாகராஜன் சென்னையில் தங்களது சாதாரணமான வீட்டில் தான் வசிக்கிறார். இவர் தான் தன்னுடைய 6000 கோடி மதிப்பிலான சொத்தை, தன்னுடைய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பகிர்ந்து அளித்துள்ளார்.