தேசிய பறவை, மலர், விலங்கு தெரியும் - தேசிய காய்கறி தெரியுமா..?
நாட்டின் தேசிய பறவை, தேசிய விலங்கு அறியும் பலருக்கும் நாம் நாட்டின் தேசிய காய்கறி எது என்று தெரியுமா..?
தேசிய அங்கீகாரம்
நாட்டின் தேசிய அங்கீகாரம் பெற்ற பலவற்றையும் நாம் அறிவோம். தேசிய விலங்கு என்று கேட்டால் சட்டென புலிகள் என்றும், தேசிய பறவை என்றால் சட்டென மயிலும் நமது நினைவிற்கு வந்து விடும்.
அதே போல தான், தேசிய பூ என்றால் தாமரை என்றும் சொல்லிவிடும் நமக்கு தேசிய காய்கறி எது என்று தெரியுமா..? பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால், அது நாட்டில் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குகிறது.
தேசிய காய்கறி
இந்த காய்கறியானது இந்தியா முழுவதும் வளர்கிறது. இதற்கென தனித்துவமான மண் நிலைமைகள் தேவைப்படுவதில்லை. அதன் காரணமாகவே தற்போது யூகிக்கும் போது கூட பலருக்கும் அந்த காய்கறி நினைவிற்கு வந்திருக்காது.
தேசிய அங்கிகாரம் பெற்ற அந்த காய்கறி பூசணிக்காய் தான். பல வகையான வைட்டமின்களின் களஞ்சியமாக உள்ள பூசணிக்காய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.