தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த முதலாளி கைது - ஏன் தெரியுமா..?

Myanmar World
By Jiyath Jul 03, 2024 10:29 AM GMT
Report

மியான்மரில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததாக ஒரு கடைக்காரரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது

ஊதிய உயர்வு 

மியான்மர் நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. இதனையடுத்து அங்கு ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.

தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த முதலாளி கைது - ஏன் தெரியுமா..? | Owner Arrested For Paying Employees Myanmar

இந்நிலையில் மியான்மரில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததாக ஒரு கடைக்காரரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. இதே காரணத்திற்காக 10 முதலாளிகளை கைது செய்த அந்நாட்டு அரசு, அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.

மண் வீட்டிற்குள் முதல் தளம்.. ஏழை வீட்டில் எவ்வளவு சுகம் - வைரலாகும் Video!

மண் வீட்டிற்குள் முதல் தளம்.. ஏழை வீட்டில் எவ்வளவு சுகம் - வைரலாகும் Video!

என்ன காரணம்?            

இதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியான்மார் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் விலைவாசி விண்ணை தொடும். இந்நிலையில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்பதை மக்கள் நம்ப ஆரம்பிப்பார்கள்.

தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த முதலாளி கைது - ஏன் தெரியுமா..? | Owner Arrested For Paying Employees Myanmar

இது அரசுக்கு தலைகுனிவாகும். இது ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை தூண்டும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது. இந்த நடவடிக்கையால் மியான்மரில் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.