சிறுவனின் நெகிழ்ச்சி செயல்; ஹெலிகாப்டரில் வந்து சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ராணுவம்!
உக்ரைன் ராணுவ வீரர்கள் பகிர்ந்த ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
உக்ரைன் ராணுவம்
ரஷ்யா - உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல காலமாக மோதல் இருந்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு திடீரென முழு வீச்சில் போரை ஆரம்பித்தது.
இந்த போரில் உக்ரைனின் பல முக்கிய இடங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் பகிர்ந்த ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
சிறுவனுக்கு சர்ப்ரைஸ்
உக்ரைன் நாட்டை சேர்ந்த சேர்ந்த ஒரு சிறுவன், ராணுவ வீரர்களின் விமான சத்தம் கேட்டாலே வீட்டிலிருந்து வெளியே வந்து, உக்ரைன் கொடியை அசைத்துக்கொண்டு இருந்துள்ளார். இதனை சில நாட்களாக கவனித்த அந்நாட்டு ராணுவ வீரர்கள் அந்த சிறுவனை சர்ப்ரைஸ் செய்ய நினைத்துள்ளனர்.
அதற்காக இனிப்பு, சாக்லேட், சில பரிசுப் பொருட்கள் அடங்கிய பெட்டி ஒன்றை அந்தச் சிறுவனுக்கு பரிசாக அளித்துள்ளனர். இதனை வீடியோவாக பதிவுசெய்த ராணுவ வீரர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.