எதிர்பார்க்கவில்லை..! திருமணம் குறித்து மவுனம் கலைத்து அதிர்ச்சி கொடுத்த ஓவியா..!

Karthick
in பிரபலங்கள்Report this article
தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் ஓவியா.
ஓவியா
மலையாள நடிகையான ஓவியா கடந்த 2010-ம் ஆண்டு களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதையடுத்து மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேம், 90 ml உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
பின்னர் படவாய்ப்புகள் குறைந்த போது அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் ஒரு சில படங்களில் நடித்தபோதிலும் பெரிதாக மீண்டும் வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை.
திருமணம்
32 வயதாகும் ஓவியவிடம் பலரும் எப்போதும் திருமணம் என்று அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பி வந்தனர். ஆனால், இது குறித்து மவுனம் காத்து வந்தார் ஓவியா.
தனது திருமணம் குறித்து பேசும் போது, தான் யாரிடம் இருந்தும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்று கூறி தனியாக இருப்பதை விரும்புவதாக தெரிவித்தார்.