நிறைய பேர் யூஸ் பண்ணிட்டு அந்த விஷயத்தில் ஏமாத்திட்டாங்க ...விரக்தியில் ஓவியா
தமிழ் ரசிகர்களிடம் நல்ல பரிட்சயம் பெற்ற நடிகையாக உள்ளார் ஓவியா.
ஓவியா
களவாணி படத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்த ஓவியா, அப்படத்திற்கு அடுத்து பல படங்களில் நடித்துவிட்டார். ஆனால், அவருக்கு எதிர்பார்த்த பெரிய வெற்றி படமெல்லாம் அமையவில்லை.
இடையில் கலகலப்பு படம் பெரிய கலெக்ஷனை பெற்றது. தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்துள்ளார் ஓவியா.
இருப்பினும் அவருக்கு ஒரு பிரேக் இல்லை. ஆனால், தொடர்ந்து சமூகவலைத்தளங்களின் மூலம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்து வருகிறார் ஓவியா.
யூஸ் பண்ணிட்டு
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி துவங்கப்பட்ட போது, அதில் கலந்து கொண்டு அவரின் இயல்பான தன்மையை வெளிக்கொண்டு வந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துவிட்டார் ஓவியா.
அப்போதிலிருந்தே ஒரு தனி fanbase ஓவியாவுக்கு என அமைந்து விட்டது. அவரின் திருமணம் குறித்த பேச்சுக்கள் அவ்வப்போது எழுவது உண்டு. ஆனால்,அப்படி வரும் செய்திகள் பலவற்றில் உண்மையில்லை.
இந்த நிலையில் தான் ஓவியாவே பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
அதில், அவர் பேசியது தான் நிறைய relationship'இல் இருந்ததாக கூறி, ஆனால் அவை யாவும் தனக்கு செட்டாகவில்லை என்றே கூறினார்.
மேலும் தன்னை பலரும் பண விஷயத்தில் ஏமாற்றிவிட்டதாக என்றும் தெரிவித்திருக்கிறார் ஓவியா.