MeToo: பிக்பாஸில் அவரை தூக்குங்க - மகளிர் ஆணையம் கோரிக்கை!
திரைப்பட பிரபலத்தை பிக்பாஸில் வெளியேற்ற உத்தரவிடுமாறு, மத்திய அமைச்சருக்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
பிக்பாஸ்
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், இந்தி மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16ஆவது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பிரபல இந்தி இயக்குநர் சஜித் கானும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். MeeToo இயக்கத்தின்போது, பல்வேறு பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
பெண்கள் ஆணையம் கோரிக்கை
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டுமே் என டெல்லி பெண்கள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தையும், பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மல்லிவால் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
साजिद खान के ख़िलाफ़ 10 महिलाओं ने #MeToo मूव्मेंट के दौरान यौन शोषण के आरोप लगाए थे। ये सभी कम्प्लेंट साजिद की घिनौनी मानसिकता दिखाती है। अब ऐसे आदमी को Bigg Boss में जगह दी गयी है जो कि पूरी तरह ग़लत है। मैंने @ianuragthakur जी को पत्र लिखा है की साजिद खान को इस शो से हटवाएँ! pic.twitter.com/4ao9elyvkk
— Swati Maliwal (@SwatiJaiHind) October 10, 2022
அவரின் பதிவில்,"MeToo இயக்கத்தின்போது, 10 பெண்கள் தங்களுக்கு சஜித் கான் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்தனர். அந்த புகார்களும், சஜித் கானின் அருவறுக்கத்தக்க மனநிலையைதான் காட்டுகிறது.
அப்படிப்பட்டவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார், இது மிகவும் தவறானது." என குறிப்பிட்டுள்ளார்.