பிக்பாஸில் மைனா நந்தினி ஏன் செல்லவில்லை? இதுதான் காரணமா!

Bigg Boss Myna Nandhini
By Sumathi Oct 09, 2022 06:45 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் அறிமுக நிகழ்ச்சியில் மைனா நந்தினி கலந்து கொள்ளாதது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் - 6

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சுமார் 100 நாட்கள் வரை இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏராளமான போட்டிகள் வழங்கப்படும்.

பிக்பாஸில் மைனா நந்தினி ஏன் செல்லவில்லை? இதுதான் காரணமா! | Biggboss 6 Tamil Myna Nandhini Secret Entry

இந்நிலையில், பிக்பாஸ் 6 நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதில், யூடியூப் மற்றும் டிக்டாக் ஷார்ட்ஸ் வீடியோ தளங்களில் பிரபலமாக இருக்கும் ஜி.பி முத்து முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

மைனா நந்தினி

அவரைத் தொடர்ந்து நடிகர் அஸிம், விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் காமெடியில் கலக்கிய அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், இசைக்கலைஞர் அசல் கொலார், ரக்ஷிதா உள்ளிட்டோர் சென்றுள்ளனர். இந்நிலையில், மைனா நந்தினி பிக்பாஸ் சீசன் 6 அறிமுக நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதாக கூறப்பட்ட நிலையில்,

பிக்பாஸில் மைனா நந்தினி ஏன் செல்லவில்லை? இதுதான் காரணமா! | Biggboss 6 Tamil Myna Nandhini Secret Entry

அவர் தற்போது கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து, அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மைனா நந்தினி சர்பிரைஸ் என்ட்ரியாக வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறதாம்.

முதல் நாள் நிகழ்ச்சி முடிந்த பிறகு மைனா நந்தினி என்ட்ரி குறித்த சீக்ரெட் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.