ஆஸ்கர் விருது பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்ட 'சூரரை போற்று'!

Soorarai Pottru list oscar
By Jon Mar 16, 2021 11:34 AM GMT
Report

ஆஸ்கர் போட்டியின் இறுதி பட்டியலில் இடம் பிடித்த நடிகர் சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டியிலிருந்து வெளியேறப்பட்டுள்ளது. திரையுலகினருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் சேர்ந்து நேற்று வெளியிட்டார்கள்.

கடந்த 2016ம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருது கொடுப்பதற்காக கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.

ஆஸ்கர் விருது பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்ட

இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகவே கருதப்படுகிறது. 93வது ஆஸ்கர் விருது விழா அடுத்த மாதம் 26ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 300 படங்கள் இறுதி செய்யப்பட்டு, வாக்கு செலுத்தும் முறை மூலம் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்ட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு ஏற்கனவே வெளியேறிய நிலையில், தற்போது 'சூரரைப்போற்று' திரைப்படம் ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறப்பட்டுள்ளது.