பின்லேடனை விருந்தாளிய வச்சிருந்தவங்களுக்கு பாடம் எடுக்க தகுதி இல்லை - பாகிஸ்தானை எச்சரித்த இந்தியா
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, பாகிஸ்தானை கண்டித்துள்ளது.
ஐநா கவுன்சில்
சீர்திருத்தப்பட்ட பலதரப்பு உறவு என்ற தலைப்பில் இந்தியாவின் தலைமையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் நடைபெற்று வருகிறது. அதில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "நம் காலத்தில் முக்கிய சவால்களாக உள்ள பெருந்தொற்று, காலநிலை மாற்றம், மோதல் அல்லது பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில்தான் ஐநாவின் திறன் சார்ந்திருக்கிறது.
இந்தியா பதிலடி
பன்முகத்தன்மையை சீர்திருத்துவதற்கான அவசரத்தில் நாம் இன்று வெளிப்படையாக கவனம் செலுத்துகிறோம். நாம் சிறந்த தீர்வுகளைத் தேடி கொண்டிருக்கும்போது இம்மாதிரியான அச்சுறுத்தல்களை இயல்பாக்குவதை ஒருபோதும் ஏற்று கொள்ள கூடாது.
இது, எல்லை தாண்டிய பயங்கரவாத்தை ஊக்குவிக்கும் நாடுகளுக்கும் பொருந்தும்.
கொல்லப்பட்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை விருந்தாளியாக வைத்து கொண்டு அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய நாடுக்கு ஐநாவில் மற்ற நாடுகளுக்கு பாடம் எடுக்க தகுதி இல்லை" என்றார்.