ஆன்லைன் சூதாட்டம்.. தடை செய்ய அவசரச் சட்டம் - அமைச்சரவை ஒப்புதல்!
ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு,
சட்டப்பேரவையில் அறிக்கைகளை சமர்ப்பிக்க முடிவெடுக்கப்பட்டது. அத்துடன், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளை தடை செய்யும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவருவது குறித்தும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சரவை ஒப்புதல்
அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில்,
சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு சமர்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.