மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை : ஆன்லைன் சூதாட்டம் காரணமா?

killed bankofficer
By Irumporai Jan 02, 2022 01:41 PM GMT
Report

சென்னை பெருங்குடியில் மனைவி, மற்றும் 2 மகன்களை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட வங்கி அதிகாரியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருங்குடியில் உள்ள பெரியார் சாலையில் வசித்துவரும், வங்கி அதிகாரி மணிகண்டன், மனைவி மற்றும் இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

துரைப்பாக்கம் போலீசார் குடியிருப்புவாசிகள் கொடுத்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரணையில் ஈடுபட்டனர். அதில், அதில் பாதுகாப்பு அதிகம் உள்ள இந்த குடியிருப்பில், மணிகண்டனை தேடி இரண்டு நபர்கள் காலையில் வந்துள்ளனர்.

குடியிருப்பை பொருத்தவரையில் சம்பந்தப்பட்டவர்களின் பார்க்க வர வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட குடியிருப்புவாசிகள் அனுமதி அளித்தால் மட்டுமே உள்ளே வர முடியும். அந்த அடிப்படையில் மணிகண்டனை நேற்று இரவு முதல் தொடர்ந்து தொடர்பு கொண்டபோது செல்போன் எடுக்காததால் சந்திக்க வந்ததாக தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பின் காவலாளி தொடர்ந்து மணிகண்டனை தொடர்பு கொண்ட போதும் தொடர்புகொள்ள முடியாமல் இருந்தது. இதனையடுத்து அவர் இருக்கும் ஏழாவது மாடிக்குச் சென்று பார்த்துள்ளனர்.

வீடு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பின் வழியாக , மணிகண்டன் வீட்டை பார்க்கும் பொழுது மின்விசிறி மட்டும் சுற்றிக் கொண்டிருந்தது பார்த்துள்ளனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் போது, மணிகண்டன் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டது போலீசாருக்கு தெரியவந்தது. மணிகண்டனுக்கு தரங்க பிரியா என்ற மனைவியும், தரன் என்ற 10 வயது மகனும், தகன் என்ற ஒரு வயதுக் குழந்தையும் இருந்துள்ளனர்.

போலீசார் அவர்களை தேடும் போது படுக்கை அறையில் தரங்க பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. முன்னதாக பத்து வயது மகன் தரண் கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக ஹாலில் கிடந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை  : ஆன்லைன் சூதாட்டம் காரணமா? | Bank Officer Killed His Family And Suicide

குறிப்பாக மனைவியை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலைப்செய்து விட்டு, ஒரு வயது குழந்தையை தலையணை வைத்து மணிகண்டன் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மணிகண்டன் கோபிச்செட்டிப்பாளையம் சேர்ந்தவர் என்பது, பார்க்லேஸ் என்ற வங்கியில் பணிபுரிந்து வந்த மணிகண்டன், இரண்டு மாதங்களாக வேலைக்குச் செல்லவில்லை எனவும், முன்னதாக ராயல் பேங்க் மற்றும் வேர்ல்ட் பேங்க் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பன்னாட்டு வங்கிகளில் முக்கிய பொறுப்பு வகித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

அவரது மனைவி தரங்க பிரியா ராயல் பேங்க் என்ற தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்ததும் தற்போது இரண்டு குழந்தைகள் இருப்பதால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மணிகண்டனை தேடி வந்த நபர்கள் கடனை வசூலிக்க வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சுமார் ஒரு கோடி ரூபாய் வரை மணிகண்டன் கடன் வாங்கி இருப்பதும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மணிகண்டனின் செல்போன் ஆய்வு செய்தபோது ஆன்லைன் கேம் கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் கேமில் பணத்தை இழந்து கடன் சுமை ஏற்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.