அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய உத்தரவு - நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு..!
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது வழக்கில் நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்த நிலையில்,
இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு
அதில் மனைவி மேகலா தொடர்ந்த மனுவை நீதிபதி பரத சக்கரவர்த்தி தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.மேலும் சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே மேகலா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பு வழங்கினார்.
செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது என கூறி அவரை விடுவிக்க நீதிபதி நீதிபதி நிஷா பானு உத்தரவு கொடுத்துள்ளனர்.
இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3வது நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் மூலம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என தகவல்
3வது நீதிபதி அளிக்கும் தீர்ப்பே மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் தீர்ப்பாக இருக்கும்.