ஆவின் அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க உத்தரவு!
ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆவின்
ஆவின் நிறுவனத்தின் மூலம் தினமும் 40 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீலம் என பிரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.
ஆவின் ஆரஞ்சு பாலின் பாக்கெட் விலை சில்லறை விலையில் ரூ.60க்கும், சிவப்பு பாக்கெட் பால் ரூ.76க்கும் விற்கப்படுகிறது. மாதாந்திர அட்டை தாரர்களுக்கு மட்டும் 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரேஷன் அட்டை
இந்நிலையில் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை சிலர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிக ரீதியாக விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஆவின் மாதாந்திர அட்டை உடன் ரேஷன் அட்டையை இணைக்கும் பணியை ஆவின் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.
அதன் அடிப்படையில், 27 மண்டலங்களில் இணையதளத்தின் மூலமாக இந்த பணி நடந்து வருகிறது. இதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.