ஆவின் சர்ச்சை: சத்துமாவு விக்கல - அண்ணாமலைக்கு மா.சு பதில்!

DMK K. Annamalai Ma. Subramanian
By Sumathi Jun 06, 2022 04:51 PM GMT
Report

ஆவினில் டீ,காபி பவுடர்தான் வாங்க முடியும்; ஹெல்த் மிக்ஸ் பவுடர்களை ஆவினில் வாங்க முடியாது; ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி ஹெல்த் மிக்ஸ் டெண்டர் விடப்பட்டு வாங்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

அண்ணாமலை குற்றச்சாட்டு

கர்ப்பணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கு பொருட்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.77 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆவின் சர்ச்சை: சத்துமாவு விக்கல - அண்ணாமலைக்கு மா.சு பதில்! | Ma Subramanian Replies Annamalai Health Mix Issue

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக சுகாதாரத் துறை சார்பில் ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டீ,காபி பவுடர்தான் இருக்கு

இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,

ஆவின் சர்ச்சை: சத்துமாவு விக்கல - அண்ணாமலைக்கு மா.சு பதில்! | Ma Subramanian Replies Annamalai Health Mix Issue

ஐசிஎம்ஆர் மற்றும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைகள்படி, கர்ப்பிணிகளுக்கு பேறு காலத்தில் என்ன ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் PRO PL என்ற health mix டெண்டர் விடப்பட்டு, 2018 ஆம் ஆண்டு முதல் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதன் சந்தை விலை ரூ.588. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அதை ரூ.460.50 க்கு வாங்கியது. இதன் மூலம் 127.50 ரூபாய் சந்தை விலையிலிருந்து குறைவாக வாங்கப்பட்டுள்ளது. இதேபோன்று அயன் சிரப் சந்தை விலை ரூ.112 ஆகும். அதை ரூ 74.60 க்கு அரசு வாங்கியுள்ளது.

இதன் மூலம் ரூ.37.40 அரசுக்கு மிச்சமாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் PROPL வாங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 500 கிராம் எடை கொண்ட 17,65,560 பாட்டில்கள் வாங்கப்பட்டுள்ளன. டெண்டர் முடிந்ததன் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி மீண்டும் டெண்டர் திறக்கப்பட்டது.

இதற்கான நிபந்தனைகள் எதுவும் மாற்றப்படவில்லை. டெண்டர் திறக்கப்பட்ட பிறகு , மாநில திட்ட ஆணையம், இந்த சத்துமாவை ஆவினிடமிருந்து பெறலாமே என கருத்து தெரிவித்தது. இந்த கருத்து குறித்து விவாதித்து முடிவு செய்ய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

ஊட்டச்சத்து நிபுணர்கள், ஆவின் நிர்வாக இயக்குநர் அந்த குழுவில் இருந்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 32 சத்துகள் கொண்ட மாவு தேவை என ஆவினிடம் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையான சத்து மாவு இருந்தால் அதை உரிய ஆய்வகத்தில் பரிசோதித்து அந்த அறிக்கையை தருமாறு ஆவினிடம் கூறப்பட்டுள்ளது. ஆவின் இதுகுறித்து இது வரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

ஆவினில் தற்போது இருப்பது milk whitener. இது டீ, காபி போடதான் பயன்படும்.