தமிழ்நாட்டில் 18 கிளைச் சிறைகளை மூட உத்தரவு- ஏடிஜிபி அதிரடி!
நாடு முழுவதும் உள்ள சிறைகள் பழுதடைந்த நிலையிலும் , அடிப்படை வசதிகள் இல்லாமலும், பாதுகாப்பு குறைப்பாடுகளுடன் உள்ளன
தமிழக சிறை
தமிழகத்தில் 18 கிளைசிறைகளை மூட தமிழக சிறை அதிகாரி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள சிறைகள் பழுதடைந்த நிலையிலும் , அடிப்படை வசதிகள் இல்லாமலும், பாதுகாப்பு குறைப்பாடுகளுடனும் உள்ள சிறைகளை மூட உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வருவாய் துறை , நீதி துறை , சிறை துறை சேர்ந்த உயர் அதிகாரிகளை சேர்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் 18 கிளைகளை மூட (ஏடிஜிபி) தமிழக சிறை துறை அதிகாரி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.
18 மாவட்டங்கள்
இதில் செங்கல்பட்டு மாவட்டம் , திருவள்ளூர் ,திருத்தணி திருவண்ணாமலை ,ஆரணி ,போளூர் , செய்யாறு,கோயம்பத்தூர் மேட்டுப்பாளையம், கடலூர் , பரங்கிமலை ,நாமக்கல் , ராசிபுரம் ,பரமத்தி மேலூர் ,, தஞ்சாவூர் ,முசிறி ,விருதுநகர்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்துார், திருவாடானை, விருதுநகர் ,சாத்துார், துாத்துக்குடி திருச்செந்துார், புதுக்கோட்டை , கீரனுார், திருமயம் உள்ளிட்ட 18 மாவட்டங்களை சிறைகளை மூடப்பட்டுள்ளனர்.