ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆரஞ்சு நிற பழங்கள் - இதை கண்டிப்பா நோட் பண்ணுங்க!
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆரஞ்சு நிற பழங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் ஆரோக்கியம் என்பது உடல் ரீதியாக மன அழுத்தம் மற்றும் சோர்வை உணராமல் ஒவ்வொரு நாளும் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அடைவதும் பராமரிப்பதும் ஆகும்.
அப்படி நாம் உண்ணும் உணவுகள், பழங்கள்ஆகியவை ஆரோக்கியத்தின் அனைத்து அம்சங்களையும் பாதுக்காக உதவுகிறது. அந்த வகையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆரஞ்சு நிற பழங்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.
பப்பாளி
வெப்பமண்டல பழமான இதில் ஆண்டிஆக்ஸிடன்கள் , வைட்டமிகள் சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது.
கோல்டன் பெர்ரி
இந்த பழத்தில் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இதில் ஆக்ஸிஜனேற்றிகள் , வைட்டமிகள் சி மற்றும் ஏ உள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் , பளபளப்பான சருமத்தை மேம்படுத்தும்.
மாம்பழம்
மாம்பழங்களில் வைட்டமிகள் சி மற்றும் ஏ உள்ளது. இவை இரண்டும் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
இனிப்பு உருளைக்கிழங்கு
வைட்டமிகள் சி மற்றும் ஏ, நார்ச்சத்து , பொட்டாசியம் நிறைந்து உள்ளது. இனிப்பு உருளைக்கிழங்கு செரிமானத்தை மேம்படுத்தவும்,நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
ஆரஞ்சு
இந்த சிட்ரஸ் பழங்கள் வைட்டமிகள் சியின் சிறந்த மூலப்பொருளாகும். இதில் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.