இனி மழைதான்.. கொடுத்தாச்சு ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Tamil nadu TN Weather Weather
By Sumathi Dec 06, 2022 05:00 AM GMT
Report

தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது. அதில், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 6 ஆம் தேதி மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இனி மழைதான்.. கொடுத்தாச்சு ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Orange Alert For Tamil Nadu On 8Th

மேலும், இது புயலாக வலுப் பெற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வரும் 8 ஆம் தேதி காலை கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரஞ்சு அலர்ட் 

இது படிப்படியாக அதிகரித்து 8 ஆம் தேதி அதி கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து 9 ஆம் தேதி தமிழகம் மற்றும் தெற்கு கடலோர ஆந்திரா கேரளா ஆகிய பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் 10 ஆம்தேதி கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.