நாளை ஆரஞ்சு அலர்ட்...கொட்டப்போகும் கனமழை!! சென்னை வானிலை எப்படி..?
தமிழகத்தில் நாளை கனமழை பெய்ய கூடும் என்பதால் நகருக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் தொடங்கியுள்ள நிலையில், வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை இருக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னனையின் நிலை என்ன..?
இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நாளை மறுநாள் 5 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இதே போல வருகிற 6 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்தோடு காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு வரும் 6ம் தேதி வரை மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.