இறங்கிய வேகத்தில் உடனே எகிறிய தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.2) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.45,600 ஆகவும், கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.5,700 ஆகவும் வி்ற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.77.70 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.77,700 ஆகவும் விற்பனையாகிறது.