கட்சி கொடி, சின்னம் எனக்கே கிடைக்கணும் - திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஓபிஎஸ் வேண்டுதல்!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.
திருச்செந்தூர் கோயில்
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் உள்ள பிரச்சனை காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவரது அணியினர் கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழங்கி தொடர்ந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை கோரி இரு அணியினரும் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தற்போது இந்த வழக்கு எடப்பாடி பழனிசாமி வசமே உள்ளது ஆனால் அதனை கைப்பற்ற ஓபிஎஸ் அணி முயல்கிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.
ஓபிஎஸ் வேண்டுதல்
இதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டுள்ளார்.
அதிகாலை கோயிலுக்கு வந்த அவர் அங்கு நடைபெற்ற முதல் கால பூஜைகள் மற்றும் அபிஷேகம் ஆகியவற்றில் கலந்துக்கொண்டு ஆதரவாளர்களுடன் விஸ்வரூப தரிசனம் செய்துள்ளார்.
இன்று வழங்க உள்ள தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்து அதன்படி இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்று அவர் மனமுருகி முருகனை வேண்டியதாக தெரிவிவிக்கப்பட்டுள்ளது.