பணவெறி, பதவிவெறி பிடித்து திமுக சுற்றிக்கொண்டிருக்கிறது - அண்ணாமலை குற்றசாட்டு!
பணவெறி, அரசியல்வெறி, பதவிவெறி பிடித்து திமுக சுற்றிக்கொண்டு இருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அண்ணாமலை
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, வீட்டை விட்டு வெளியே வராத முதல்வர், துபாய், ஸ்பெயின், ஜப்பான், சிங்கப்பூர் செல்கிறார். வீட்டுக்கு வெளியே இருக்கும் பிரதமர் நாட்டு மக்களை சந்திக்கிறார்.
முதல்வர் வெளியே வர வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. தி.மு.கவினரும் முதல்வரை நகர்வலம் அழைத்து வரலாம். பிரதமர் மோடி 24 மணி நேரமும் வீதிக்கு வந்து மக்களை சந்திக்கிறார்.கடுமையாக உழைக்கிறார்.
குற்றசாட்டு
உழைக்க தெரியாத முதல்வர் தேர்தல் தோல்விக்காக இப்போதே காரணம் தேடுகிறார். பிரதமர் வீதிக்கு வரும் நிகழ்ச்சியை கையில் எடுத்துள்ளார்.
திமுக வெறிபிடித்து சுற்றிக்கொண்டிருக்கிறது. மதம் பிடித்த யானை தன்னிலையை மறந்து சுற்றுவது போல, பண வெறி பிடித்து திமுக சுற்றிக்கொண்டிருக்கிறது. பணவெறி, அரசியல்வெறி, பதவி வெறி பிடித்துள்ளதால், திமுக வுக்கு வாக்காளர்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.
அமைச்சர் உதயநிதி பேசியது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் கண்டனங்களை பதிவு செய்துள்ளன. தமிழகத்தில், தவறு செய்த யாரும் தப்பி செல்ல முடியாது. தவறு செய்தவர் சட்டத்தின் கரத்துக்கு அகப்படுவர் எனக் குறிப்பிட்டிருந்தார்.