OPS, TTVக்கு கூட்டணியில் இடமில்லை? இரவில் மோடியை சந்திக்கும் இபிஎஸ்!
எடப்பாடி பழனிசாமி இன்று இரவு பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணியில் ஓபிஎஸ்?
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தூத்துக்குடிக்கு வருகிறார். அங்கு விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்கிறார்.
பின் திருச்சி வந்தடையும் பிரதமர் ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் வழிபாடு மேற்கொள்கிறார். இதற்கிடையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு திருச்சியில் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடி-இபிஎஸ் சந்திப்பு
அவருடன் அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் உடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தொடர்வதற்கு இபிஎஸ் எதிர்ப்பு தெரிவிப்பார் என்று கருதப்படுகிறது.
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எங்கள் கூட்டணியில் தான் தொடர்கிறார்கள் என்று அண்ணாமலை தெரிவித்து வந்தார்.
ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பதற்கு நேரம் கேட்டதாகவும், ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.