அதிமுகவுக்கு தான் ஓட்டு - விஜய்யை விளாசித் தள்ளிய ஓபிஎஸ்!
அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சி
சேலத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''பிளவுபட்ட அதிமுக மீண்டும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெற முடியும். இதுதான் எனது நிலைப்பாடு. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.
எடப்பாடி பழனிசாமி தனது பிடிவாதத்தைக் கைவிட்டு அனைவரும் ஒன்றுசேர வேண்டும். கட்சியின் ஒற்றுமைக்காக செயல்பட வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்காக மட்டுமே தான் வாக்கு கேட்பேன்.
ஓபிஎஸ் உறுதி
தனிப்பட்ட முறையில் தனக்கு எந்த இலக்கும் இல்லை. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே எனது நோக்கம். அதிமுக எப்போதும் மக்கள் இயக்கம் தான். அதை யாராலும் சிதைக்க முடியாது. இபிஎஸ்ஸை முதலமைச்சர் வேட்பாளராக பாஜக ஏற்றுக் கொண்டுள்ளது.
யார் முதலமைச்சராக வர வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. கூட்டணிகள் குறித்த முடிவுகள் தேர்தல் காலத்தில் எடுக்கப்படும். அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. தேர்தலுக்கு இன்னும் நாள் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.