இதை மட்டும் செய்தால் விஜய் காலி பெருங்காய டப்பாகிவிடுவார் - சேகர்பாபு தாக்கு!
விஜய் இன்னும் 3 மாநாடுகளை நடத்தினாலே பெருங்காய டப்பாகிவிடுவார் என சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
விஜயின் நிலை
அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுவரை 2 மாநாடு முடித்துள்ளார்.
இப்போதே நரியின் சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும் டும்.. ராஜா வேஷம் கலைந்து போச்சு டும் டும் டும் டும் என்பதை போல் அனைத்து தரப்பு விமர்சனங்களையும் தாங்கி சென்றுள்ளார்.
சேகர்பாபு உறுதி
இன்று அனைவரும் விமர்சனம் வைக்கும் அளவிற்கும் விஜய் தள்ளி வைக்கப்பட்டுள்ளார். விஜய் இன்னும் 2, 3 மாநாடு நடத்தினால் காலி பெருங்காய டப்பாவாகிவிடுவார். ஸ்டாலினை அங்கிள் என்று அழைத்ததன் மூலமாக, அவரின் உயரம் அவ்வளவு தான் என்று தெரியப்படுத்திவிட்டார்.
திராவிட மாடல் அரசு மத்திய அரசுக்கு மட்டுமல்லாமல் உலகத்திற்காது. அதனால் விஜயின் சிறுபிள்ளைத்தனமாக பேச்சிற்கு எல்லாம் பதில் சொல்லி எங்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. 2026ஆம் ஆண்டு களத்தில் நோக்கி திமுக சென்று கொண்டுள்ளது.
இப்படி சிறுபிள்ளைத்தனமாக பேசுபவரை களத்தில் சந்திப்போம். 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். அந்த வெற்றியை முதல்வர் ஸ்டாலினின் கரங்களில் ஒப்படைப்போம் என்று தெரிவித்துள்ளார்.