தவழ்ந்து தான் பதவி - எடப்பாடியே ஒப்புக்கொண்டார் - ஓபிஎஸ்!!
நேற்று சென்னை உயர்நீதிமன்றம் கட்சி பெயர், கொடி, கரை வெட்டி ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை உறுதிப்படுத்தியுள்ளது.
ஒப்புக்கொண்டு விட்டார்
தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து வந்ததுதான் பதவியை பெற்றார் என்பதை அவரே ஒப்புக்கொண்டுவிட்டார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அனைவரும் விமர்சிக்கின்றனர் என்பதால் தவழ்ந்து தவழ்ந்து, அதாவது படிப்படியாக கட்சியில் வளர்ந்து வந்ததாக புது விளக்கம் கொடுக்கிறார் எடப்பாடி பழனிசாமி என தனது விமர்சனத்தை முன்வைத்து சென்றார்.
நீதிமன்றம் அதிரடி
முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, தனிநபர் அமர்வில் மேல்முறையீடு செய்யும்படியும் அறிவுறுத்தியிருந்தது. இதன் காரணமாக மீண்டும் ஒரு வாய்ப்பிருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் கூறும் நிலையில், எடப்பாடி தரப்பினர் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
ஜெயக்குமார் இந்த தீர்ப்பு குறித்து பேசும் போது, உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைத்த ஓபிஎஸ்'ஸிற்கு ஆண்டவனே சரியான தண்டனையை அளித்து விட்டார் என சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.