உண்ட வீட்டுக்கு ரெண்டகம் - இறைவனே கொடுத்த தண்டனை..! ஓபிஎஸ் தீர்ப்பு ஜெயக்குமார் அதிரடி..!
அதிமுகவின் கரை வெட்டி - கட்சி சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த தடையை உறுதி செய்திருந்தது நீதிமன்றம்.
ஜெயக்குமார் பேட்டி
இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் மூத்த தலைவர் ஜெயக்குமார், நீதிமன்ற தீர்ப்பினால், அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதாக தெரிவித்து, ஓபிஎஸ் ஒரு நம்பிக்கை துரோகி என்றும் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த துரோகி என்றும் கடுமையாக சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தொண்டர்கள் கோவில் போல் பார்க்கும் அதிமுக அலுவலகத்தை அடி ஆட்களுடன் வந்து அடித்து நொறுக்கி ஆவணங்களையெல்லாம் எடுத்து சென்றவர் ஓபிஎஸ் எனக்கூறி, அதனை யாரும் மறக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இறைவனே...
ஓபிஎஸால் கொதித்து போயிருந்த தொண்டர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று கூறி, குழப்பத்தை விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே நீதிமன்றங்களில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்து வந்த நிலையில், நியாயமான ஒரு நல்ல தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கி இருக்கிறது என்றார்.
அதிமுக தொண்டர்களின் மனஉளைச்சலுக்கு ஆளாகும் வகையில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைத்த ஓ.பன்னீர் செல்லவத்திற்கு இறைவேனே தகுந்த தண்டனையை வழங்கியுள்ளார் என்றும் ஓபிஎஸ்;ஸை விமர்சித்து நீதிமன்ற தீர்ப்பில் தனது கருத்தை ஜெயக்குமார் தெரிவித்தார்.
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைத்த ஓபிஎஸால் இனி அது முடியாது. கழத்தை பொறுத்தவரை ஒற்றுமையுடன் எடப்பாடியார் பக்கம் உள்ளனர். எங்கே போனாலும் நீதி எங்கள் பக்கம்தான் இருக்கும். இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.