மக்களவை தேர்தல் - பின்வாங்கிய ஓபிஎஸ் - பாஜகவின் அழுத்தம் காரணமா..?
வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஓபிஎஸ் அணி பின்வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் அணி
கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் தேனீ தொகுதியில் வென்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத். இவர் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட போவதாக ஓபிஎஸ் கூறி, பாஜகவுடன் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். தங்கள் அணி தரப்பில் போட்டியிட இதுவரை 414 பேர் விருப்பமனு அளித்துள்ளதாகவும் செய்தியாளர்களை சந்தித்த போது, ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.
தேனீ, சிவகங்கை போன்ற தென்மாவட்டங்களை கூட்டணியில் பெற்று ஓபிஎஸ் தரப்பு நிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, தாமரை சின்னத்தில் போட்டியிடும் படி பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
போட்டியில்லை
இந்த சூழலில் தான், தற்போது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது மக்களவை தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டியில்லை. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இன்று சென்னையில் நடக்க உள்ள ஆதரவாளர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.இரட்டை நிலை சின்னம் கிடைக்காது என்ற காரணத்தால், அவர் தேர்தலில் இருந்து பின்வாங்குகிறாரா..? அல்லது பாஜக தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என நிர்பந்தித்தால் அவர் பின்வாங்குகிறாரா..? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.