இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி - ஓபிஎஸ் சொன்ன பாய்ண்ட் - அதிர்ச்சியில் இபிஎஸ்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என மீண்டும் ஒரு முறை தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
இரட்டை இலை விவகாரம்
கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதை அடுத்து, தொடர்ந்து சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் இரு தரப்பிற்கும் மோதல் இருந்து வருகின்றது.
இதில், தற்போது அதிமுக தலைமையில் தனி கூட்டணி அமைக்க பொதுசெயலாளர் இபிஎஸ் முயன்று வரும் சூழலில், ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இடம்பிடிப்பது உறுதியாகியுள்ளது. 5 இடங்களை ஓபிஎஸ் தரப்பு கேட்ட நிலையில், தொகுதி பங்கீட்டில் மட்டும் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.
இது தொடர்பாக, இன்னும் பாஜக தரப்பு இறுதி முடிவை எடுத்திடவில்லை. இந்த கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் என கூறப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக கூறினார்.
சின்னம் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, நிச்சயமாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி என உறுதியாக தெரிவித்து சென்றார் ஓபிஎஸ். இதே நேரத்தில் தான், திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் அதிமுகவிற்கு ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் மனு அளித்துள்ளார்.
இந்த மனுவிற்கு பதிலளிக்கும் படி, தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்குமாறு மனு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.