இரட்டை இலை சின்னத்தில் சிக்கல் - இபிஎஸ்'ஸிற்கு தேர்தல் ஆணையம் பரபரப்பு நோட்டீஸ்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரட்டை இலை
சின்னம் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இரண்டாக பிரிந்ததை அடுத்து, இரட்டை இலை சின்னம் குறித்து அவ்வப்போது வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றது.
ஓபிஎஸ் தரப்பின் முன்னெடுப்புகளால் தொடர்ந்து இபிஎஸ் தரப்பு இந்த நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. இந்த சூழலில் தான், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக'விற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளார்.
அதே போல, கடந்த மாதம் 28-ம் தேதி அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்துள்ளார் சூரியமூர்த்தி. அதில், “அதிமுக உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாகத் தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், சூரியமூர்த்தி அளித்த மனுவின் அடிப்படையில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.