கட்டம் கட்டிய ஈபிஎஸ்.. தேர்தல் ஆணையத்தை நாடிய ஓபிஎஸ்

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Jun 24, 2022 05:44 AM GMT
Report

டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

டெல்லியில் மனு 

பொதுக்குழு நேற்று நடைபெற்ற நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கட்டம் கட்டிய ஈபிஎஸ்..   தேர்தல் ஆணையத்தை நாடிய ஓபிஎஸ் | Ops Seeks Election Commission Of India

டெல்லி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பாஜக சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்போர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார். அந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததால், டெல்லி செல்கிறேன் என தெரிவித்திருந்தார்.

நிராகரிக்கப்பட்ட தீர்மானங்கள்

இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. மேலும் அதிமுக அவைத் தலைவர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் தேர்தெடுக்கப்பட்டார்.

பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவை அவமதித்தாக ஓபிஎஸ் தரப்பு குற்றசாட்டியிருந்தது.

கட்டம் கட்டிய ஈபிஎஸ்..   தேர்தல் ஆணையத்தை நாடிய ஓபிஎஸ் | Ops Seeks Election Commission Of India

இந்த நிலையில், ஓபிஎஸ் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனுவில், அதிமுகவில் சட்டவிதிகளில் திருத்தும் மேற்கொண்டு கட்சி தலைமை பதவியை மாற்றம் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாகத்தான் வரும் ஜூலை 11 அன்று சட்டவிரோதமாக பொதுக்குழுவிற்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்டம் கட்டிய ஈபிஎஸ்..   தேர்தல் ஆணையத்தை நாடிய ஓபிஎஸ் | Ops Seeks Election Commission Of India

இதற்காக எந்தவித அனுமதியும் பெறவில்லை, இதன் காரணமாக அந்த 11-ம் தேதி பொதுக்குழு நடத்த அனுமதிக்க கூடாது என்றும் சட்டவிதிகளில் திருத்தும் மேற்கொண்டு கட்சி தலைமை பதவியை மாற்றம் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒரு தடை விதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதே நேரத்தில் இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் தரப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொய்யான வழக்குகளை வாங்குவது பாஜக தொண்டனுக்கு புதிதல்ல : பாஜக அண்ணாமலை