கட்சியை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவது தான் முக்கியம் ..ஓ.பன்னீர்செல்வம் ஆதங்கம் !

O Paneer Selvam Tamil nadu Election
By Swetha Jun 14, 2024 04:22 AM GMT
Report

கட்சியைக் காப்பாற்றுவதே முக்கியம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இடைத்தேர்தல் 

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது.இதில் அதிமுக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, அதிமுகவில் பிளவுபட்ட அமைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கட்சியை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவது தான் முக்கியம் ..ஓ.பன்னீர்செல்வம் ஆதங்கம் ! | Ops Says Protecting Party Is More Important Now

அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தினுடைய தொண்டர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்ற வேண்டுகோள்.மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு,

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் பிளவுற்றுக் கிடக்கும் இதே நிலையோடு, நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை எதிர்கொண்டு,

OPS-EPS பிரச்சனையில் தொண்டர்கள் தான் பாதிக்கப்படுரோம் - அம்மா ஆதரவாளர் கற்பகம்

OPS-EPS பிரச்சனையில் தொண்டர்கள் தான் பாதிக்கப்படுரோம் - அம்மா ஆதரவாளர் கற்பகம்

ஓபிஎஸ் வருத்தம்  

பதினோறாவது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா, இல்லை ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கம்பீர மிடுக்கோடு கட்சியை களமிறக்கி 2019-ல் இதே விக்கிரவாண்டி தொகுதியில் நாம் ஈட்டிய அன்றைய அதே இடைத் தேர்தல் வெற்றியை மீண்டும் நிலைநாட்டி கழகத்தை வெற்றிப் பாதைக்கு

கட்சியை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவது தான் முக்கியம் ..ஓ.பன்னீர்செல்வம் ஆதங்கம் ! | Ops Says Protecting Party Is More Important Now

அழைத்து வரப் போகிறோமா என்கிற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ததும்பி நிற்கிறது.எனவே, கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியைக் கைப்பற்றி கொள்வதினும் கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.