பிரிந்து கிடக்கும் அதிமுக இணையும்; உரிய நேரத்தில் சசிகலாவை சந்தித்து பேசுவேன் - ஓபிஎஸ்!
உரிய நேரத்தில் சசிகலாவை சந்தித்து பேசுவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக இணையும்..
முன்னதாக அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் நீக்கப்பட்டு விட்டனர். டி.டி.வி. தினகரன் தனியாக கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார். ஓ.பன்னீர் செல்வம், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புகுழுவை நடத்தி வருகிறார்.
இதனால் அ.தி.மு.க. தொண்டர்களிடையே பிளவு ஏற்பட்டது. அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.வால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையை மாற்ற அதிமுக ஒன்றுபட செயல்பட வேணும் என்று சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
சசிகலாவை சந்திப்போம்
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டார். அதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும், ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகின்றனர்.
எனவே விரைவில் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரையும் ஒன்றாக இணைப்பதற்கான பணிகள் தொடங்கி நடக்கும். நான் சசிகலாவை சந்திக்கும் நிகழ்ச்சி, உரிய நேரத்தில், தேவைப்படும்போது நாங்கள் சந்தித்து பேசுவோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.