இணையும் ஓபிஎஸ் - சசிகலா? ஈபிஎஸ் என்ன செய்யப்போகிறார் - அடுத்த மூவ் என்ன!
அதிமுகவின் தேர்தல் தோல்வி குறித்த முதற்கட்ட ஆலோசனை முடிந்துள்ளது.
முதற்கட்ட ஆலோசனை
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்தது. 7 இடங்களில் டெபாசிட் இழந்தது.
இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 8 நாட்களில் 23 தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அதில், கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். பெண்கள், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
ஈபிஎஸ் அடுத்த மூவ்?
2-ஆவது கட்டமாக 17 தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 24-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சில மாவட்ட நிர்வாகிகளும் அதை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.