பொங்கல் பரிசு: ரூ.3000 வழங்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்!

Government of Tamil Nadu O. Panneerselvam
By Sumathi Dec 15, 2022 07:56 AM GMT
Report

பொங்கல் பரிசாக 3000 ரூபாய் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கல் பரிசு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனும் பெயரில் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்

பொங்கல் பரிசு: ரூ.3000 வழங்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்! | Ops Request Tamilnadu Govt 3000 For Pongal

வேட்டி - சேலை வழங்குவது பொங்கல் தொகுப்பு வழங்குவது ரொக்கமாக பணம் வழங்குவது என்பது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்ற நடைமுறையாகும். கடந்த 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டியை முன்னிட்டு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்

 ஓபிஎஸ் கோரிக்கை

சுமார் ரூ.1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கும் என ஆணையிட்டது. ஆனால், 15 பொருட்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. மேலும், கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு திட்டத்தால் மக்கள் எந்த பயனும் அடையவில்லை என்றும்,

அரசாங்க பணம் விரயமாக்கப்பட்டதுதான் மிச்சம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023ஆம் ஆண்டு பொங்கல் திருநாளினை முன்னிட்டு அனைத்து அட்டைதார்களுக்கு ரூ.3,000 வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.