தி கோட் படம் பார்த்தீங்களா? நிருபரின் கேள்விக்கு ஓபிஎஸ் கொடுத்த Reaction - வைரல் வீடியோ!
நிருபரின் கேள்விக்கு ஓபிஎஸ் கொடுத்த ரியாக்ஷன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கோட் படம்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில், பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா.லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எனவே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஓபிஎஸ்
இந்த நிலையில், கோட் படம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கூறிய பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
படம் குறித்து ஓபிஎஸ் கூறியதாவது, புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திய பிறகு நானும் திரைப்படத்தை பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என தெரிவித்துள்ளார்.
‘கோட்’ பார்த்தாச்சா..? ஓபிஎஸ் சொன்ன SHOCKING பதில்..! #GOAT #thegoat pic.twitter.com/ikOAcfLdcF
— Thanthi TV (@ThanthiTV) September 6, 2024