நள்ளிரவில் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை - பண்ருட்டி ராமச்சந்திரன் முக்கிய தகவல்!

O Paneer Selvam AIADMK Election
By Swetha Mar 09, 2024 04:28 AM GMT
Report

முன்னாள் முதலமைச்சர் ஓ.பண்ணீர்செல்வம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

மக்களவை தேர்தல்

இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசியல் காட்சிகள் கூட்டணி விவகாரங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

o paneerselvam

இந்நிலையில்,தேர்தல் தொடர்பாக நள்ளிரவில் ஆலோசனை செய்த ஓ.பன்னீர்செவல்வம், ஆதரவாளர்களிடம் நாளை விருப்ப மனு பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

வஞ்சகன்  தினகரனோடு சேர்ந்து பாழாய் போய்விட்டார் OPS : ஜெயக்குமார் காட்டம்

வஞ்சகன் தினகரனோடு சேர்ந்து பாழாய் போய்விட்டார் OPS : ஜெயக்குமார் காட்டம்

கூட்டணி பேச்சுவார்த்தை

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் அணி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு பெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 10 ஆயிரம் ரூபாயை செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அளித்த நபர்களிடம் மாலை 6 மணி முதல் நேர்காணல் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நள்ளிரவில் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை - பண்ருட்டி ராமச்சந்திரன் முக்கிய தகவல்! | Ops Formed A Committee To Negotiate The Alliance

மேலும், பாஜகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்து ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்,ஜே.சி.டி பிரபாகர், தர்மர், கு.ப. கிருஷ்ணன், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் இடம்பிடித்து உள்ளனர்.