Friday, Jul 25, 2025

களைகட்டிய திருமண விழா; சசிகலா பங்கேற்கவில்லை - மீண்டும் ஓபிஎஸ் ஏமாற்றம்!

Tamil nadu V. K. Sasikala O. Panneerselvam
By Sumathi 2 years ago
Report

வைத்தியலிங்கம் வீட்டு திருமண விழாவில் சசிகலா பங்கேற்கவில்லை.

திருமண விழா

கடந்த மாதம், ஓ.பன்னீஎ செல்வம் திருச்சியில் மாநாடு நடத்தினார். அதற்கு சசிகலா அழைக்கப்படுவார் என ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் கலந்துக்கொள்ளவில்லை.

களைகட்டிய திருமண விழா; சசிகலா பங்கேற்கவில்லை - மீண்டும் ஓபிஎஸ் ஏமாற்றம்! | Ops Disappointed Sasikala Not Participate Wedding

தொடர்ந்து, டிடிவி தினகரனை ஓபிஎஸ் நேரில் சந்தித்தார். இந்நிலையில், வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவிற்கான அழைப்பிதழை சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரிடம் வைத்திலிங்கம் நேரில் கொடுத்து அழைப்பு விடுத்தார்.

ஓபிஎஸ் ஏமாற்றம்

அதே விழாவில் சசிகலாவையும் தான் சந்தித்து பேசுவேன் என்று ஓபிஎஸ் தெரிவித்து இருந்தார். ஆனால், திருமண விழாவில் ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் மட்டுமே ஒருசேர அமர்ந்திருந்தனர். சசிகலா பங்கேற்கவில்லை.

முன்னதாக தன்னிடம் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த வைத்திலிங்கத்திடம், உடல் நலக்குறைவு காரணமாக தன்னால் திருமண விழாவில் கலந்துகொள்ள முடியாது. மற்றொரு நாள் வீட்டுக்கு வந்து மணமக்களை வாழ்த்துகிறேன் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.