வைத்தியலிங்கம் அழைப்பு; திருமணத்தில் சந்திக்கும் ஓபிஎஸ் - சசிகலா: அதிர்ச்சியில் அதிமுக
திருமண விழாவில் ஓபிஸ் மற்றும் சசிகலா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமண விழா
சட்டத்தின் படியும், அதிகாரத்தின் படியும் அதிமுகவின் தலைமையாக இ.பி.எஸ். முடிவாக, தொண்டர்களின்படி தானே அதிமுகவின் தலைமை என நிரூபிக்க கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தினார்.
ஓபிஎஸ் அதற்கு சசிகலா அழைக்கப்படுவார் என ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் கலந்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து, டி.டி.வி. தினகரனை ஓ.பி.எஸ். நேரில் சந்தித்தார்.
ஓபிஎஸ் - சசிகலா
இந்நிலையில், ஜூன் 7 ஆம் தேதி தஞ்சாவூரில் நடக்கவிருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் திருமணத்திற்குன் செல்லவுள்ளார். ஓ.பி.எஸ். தலைமை தாங்கும் இந்தத் திருமணத்திற்கு டி.டி.வி தினகரனை அழைத்துள்ள வைத்திலிங்கம்,
அடுத்ததாக சசிகலாவை அழைக்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம், திருமணத்தில் ஓ.பி.எஸ். - சசிகலா சந்திப்பு நிகழும் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.