திமுக அரசு இதுலதான் குறியா இருக்கு..அக்கறையே இல்லை..ஓபிஎஸ் கடும் விமர்சனம்!

O Paneer Selvam Tamil nadu DMK
By Swetha Sep 30, 2024 07:30 AM GMT
Report

சொத்து வரி உயர்வு தொடர்பாக தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஓபிஎஸ் 

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சொத்துவரியை மேலும் 6 சதவிகிதம் உயர்த்துவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஏற்கனவே 150 சதவிகிதம் அளவிற்கு சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தியது. .

திமுக அரசு இதுலதான் குறியா இருக்கு..அக்கறையே இல்லை..ஓபிஎஸ் கடும் விமர்சனம்! | Ops Criticize Dmk Govt For Property Tax Hike

இந்த நிலையில் தற்போது மீண்டும் 6 சதவிகிதம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றுவது கடும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், திமுக அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது என்றும்,

இந்தச் சொத்து வரி உயர்வின் மூலம் வீட்டின் உரிமையாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவதோடு, சொத்து வரி உயர்வின் காரணமாக வாடகைக்கு இருப்போரும் கூடுதல் வாடகையினை செலுத்த நேரிடும்.

இது மட்டுமல்லாமல், குடிநீர் வரி என்பது சொத்து வரியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதால், சொத்து வரிக்கேற்ப குடிநீர் வரியும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், “இது ஒருபுறம் என்றால்,

ஓபிஎஸ் மீது காவல் நிலையத்தில் புகார் : காரணம் என்ன?

ஓபிஎஸ் மீது காவல் நிலையத்தில் புகார் : காரணம் என்ன?


விமர்சனம்

மறுபுறம் வணிக மின் பயன்பாட்டு நுகர்வோர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு சக்தி காரணி அபராதம் (Power Factor Penalty) விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன” என்று குற்றம்சாட்டினார்.

திமுக அரசு இதுலதான் குறியா இருக்கு..அக்கறையே இல்லை..ஓபிஎஸ் கடும் விமர்சனம்! | Ops Criticize Dmk Govt For Property Tax Hike

மக்களின் கருத்தினை கேட்காமலேயே தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் இதுபோன்ற அபராதத்தினை விதித்துள்ளதாகவும், இதனை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் மின் தேக்கிகளை (Capacitors)

பொருத்தி அபராதத்தினை தவிர்த்து இருக்கலாம் என்றும் வணிக மின் உபயோகிப்பாளர்கள் தெரிவிப்பதாகவும் அவர் விமர்சனம் செய்தார். மக்களிடம் இருந்து எப்படி கட்டணத்தை வசூலிக்கலாம் என்பதில்தான் திமுக அரசு குறியாக இருக்கிறது என்றும்,

மக்கள் நலனில் திமுகவிற்கு அக்கறையில்லை என்பதும் தெளிவாகிறது எனவும் குற்றம்சாட்டிய ஓபிஎஸ், பொதுமக்கள்படும் துன்பங்களைக் கருத்தில் கொண்டு, ஆண்டுக்காண்டு ஆறு விழுக்காடு சொத்து வரி உயர்வை ரத்து செய்யவும்,

வணிக மின் பயன்பாட்டாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சக்தி காரணி அபராதத்தை கைவிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.