எல்லாம் நன்மைக்குதான்; அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு - ஓபிஎஸ் நச் பதில்
அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
அமித்ஷா-இபிஎஸ் சந்திப்பு
ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட வேண்டும்; பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைவர்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசினர்.
ஓபிஎஸ் பதில்
பின் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி தனியாகவும் ஆலோசனை நடத்தினார். இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இடம்பெறும் என தெரிகிறது.
தற்போது அமித்ஷாவுடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், "எல்லாம் நன்மைக்கே" என்று மட்டும் பதிலளித்துள்ளார்.