தம்பி துபாயா..? கூலிங் கிளாஸை போடுங்க? பிரச்சாரத்தில் கலாய்த்த ஓபிஎஸ்..!

O Paneer Selvam BJP Ramanathapuram Lok Sabha Election 2024
By Karthick Apr 08, 2024 07:08 AM GMT
Report

பாஜகவின் ஆதரவுடன் சுயேட்சையாக ராமநாதபுரத்தில் களமிறங்கியுள்ளார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் - பாஜக கூட்டணி

பாஜக கூட்டணியில் இணைந்த ஓபிஎஸ் இறுதியில் சுயேச்சை வேட்பாளராக ராமநாதபுரத்தில் பாஜக ஆதரவுடன் போட்டியிடுகிறார். சுயேட்சையாக அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ops-campaign-youngster-fun

தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஓபிஎஸ், ராமநாதபுர சுற்றுவட்டார பகுதிகளில் தனது ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

எனக்கு இது என்ன கொடுமையோ..? தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென கண்ணீர் வடித்த பிரேமலதா

எனக்கு இது என்ன கொடுமையோ..? தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென கண்ணீர் வடித்த பிரேமலதா

கூலிங் கிளாஸா..?

ராமநாதபுர தொகுதிக்கு உட்பட்ட செம்படையார்குளம் பகுதியில் ஓபிஎஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் படுஜோராக டிப் - டாப்பாக கோட் சூட் அணிந்து வந்தார்.

ops-campaign-youngster-fun

அவர், ஓபிஎஸ்'ஸிடம் "நான் துபாயிலிருந்து வருகிறேன், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும்" என கோரிக்கை வைத்தார். அவரின் பேச்சை கவனித்த ஓபிஎஸ், தம்பி துபாயா?, முதல்ல கூலிங் கிளாஸை போடுங்க” என கூற அங்கிருந்தவர்கள் சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.