திமுக எம்பிக்கு எதிரான வழக்கு.. ஆவணத்தில் கையெழுத்திட்ட ஓ.பன்னீர்செல்வம்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களில் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டார்.
திமுக எம்பி
2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த 18வது நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஷ் கனியிடம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளாராகப் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியடைந்தார்.
இதையடுத்து நவாஸ்கனியின் வெற்றியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம்
இந்த நிலையில் வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை சரிபார்த்து கையெழுத்திடுவதற்காக, ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார்.
வழக்கறிஞர்களுடன் உயர்நீதிமன்ற பதிவுத்துறை அலுவலகத்துக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம், அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து கையெழுத்திட்டார்.